

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக ராஜபக்ச அறிவித்துள்ளார்.
முன்னதாக தனது சுதந்திரக் கட்சி சார்பில் வரவிருக்கும் தேர்தலில் ராஜபக்ச நிறுத்தப்பட மாட்டார் என்று அந்நாட்டு அதிபர் சிறிசேனா நேற்று தெரிவித்திருந்தார்.
அதிபர் தேர்தல் தோல்விக்கு பிறகு தீவிர அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியிருந்த ராஜபக்ச, தான் இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அதிகாரபூர்வமாக 0தெரிவித்துள்ளார்.
இன்று காலை தனது சொந்த கிராமமான மெதமுலன்னையிலிருந்து இந்த அறிவிப்பை ராஜபக்சே வெளியிட்டார். "நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பம். இதனை நான் நிறைவேற்றுவேன்" என்று கூறியுள்ளார்.
முன்னாள் அதிபர் ராஜபக்ச மீண்டும் அரசியலில் களமிறங்குவது உறுதியாகி இருக்கும் நிலையில், அவர் எந்தக் கட்சியிலிருந்து போட்டியிடுவார் என்பது குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் சிறிசேனா, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அணிகளோடு தற்போது ராஜபக்சவும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.