

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஐரோப்பிய யூனியன் மேற்பார்வைக் குழு கண்காணிக்க உள்ளது.
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அந்நாட்டு நாடாளுமன்றத்தை கடந்த மாதம் கலைத்தார். இதற்கான தேர்தல் ஆகஸ்ட் 17-ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில், நடக்க இருக்கும் தேர்தல் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மையை கருத்தில் கொண்டு தேர்தல் பணிகளை கண்காணிக்க ஐரோப்பிய யூனியன் தனது மேற்பார்வைக் குழுவை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.
இதற்காக 8 பேர் கொண்ட குழு கொழும்பு சென்றடைந்துள்ளது. இதைத் தவிர, 28 பேர் கொண்ட மற்றொரு குழு தேர்தலுக்கு முன்னதாக பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது.