ஹிட்லர் செய்ததை புதினும் செய்கிறார்: சார்லஸ் பேச்சால் சர்ச்சை

ஹிட்லர் செய்ததை புதினும் செய்கிறார்: சார்லஸ் பேச்சால் சர்ச்சை
Updated on
1 min read

முன்பு ஹிட்லர் செய்ததை இப்போது புதினும் செய்து வருகிறார் என்று பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமிலா பார்க்கருடன் கனடாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியின் போது பாதிக்கப்பட்டு நாட்டை விட்டு ஓடி வந்த பெண் ஒருவருடன் சார்லஸ் பேசினார்.

அப்போது, முன்பு ஜெர்மனியில் ஹிட்லர் செய்த கொடுமைகளைப் போன்று இப்போது ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் செய்கிறார் என்று அப்பெண்ணிடம் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் ரஷ்ய அதிபர் குறித்து இப்படி பகிரங் கமாக குற்றம்சாட்டி கருத்து தெரிவித் துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது. பிரான்ஸில் ஜூன் 6-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் புதினை சார்லஸ் சந்திக்க உள்ளார்.

இந்நிலையில் சார்லஸின் இந்த பேச்சு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது குறித்து சார்லஸ் தரப்பில் இருந்து எந்த பதிலோ, விளக்க அறிக்கையோ இதுவரை வெளியிடப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in