

சுவாசக் கோளாறை ஏற்படுத்தக் கூடிய மர்மமான வைரஸ் கிருமி தொற்று காரணமாக சவூதி அரேபியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வைரஸ் கிருமி சவூதி அரேபியாவில் முதல் முதலாக 2012ல் கண்டறியப்பட்டது. இந்நிலையில் இந்த வைரஸ் தொற்றால் மேலும் 4 பேர் புதன்கிழமை உயிரிழந்துள்ளனர். மெர்ஸ் கோவ் என அழைக்கப் படும் மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேடரி சிண்ட்ரோம் கரோனா வைரஸ் இந்த வளைகுடா நாட்டில் மட்டும் 463 பேரை பாதித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர் தான், எகிப்து, லெபனான், மற்றும் அமெரிக்காவிலும் இந்த வைரஸ் கிருமி பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது ஆனால் சவூதி அரேபியாவுக்கு பயணம் சென்றவர்கள் அல்லது பணி யாற்றியவர்கள் அல்லது அங்குள்ள மருத்துவ ஊழியர்களையே இது வெகுவாக பாதிக்கிறது.
சவூதி அரேபியாவில்தான் இந்த வைரஸ் கிருமி பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிக மாக உள்ளது. ஒட்டகம் மூலமாகவே இந்த வைரஸ் பரவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.