

கனடா நாட்டில் க்யுபெக் பகுதியில் வாழும் புகைப்பிடிப்பாளர்களுக்கு 12.4 பில்லியன் அமெரிக்க டாலர் களை (சுமார் ரூ.80 ஆயிரம் கோடி) அங்குள்ள சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் இழப்பீடாக வழங்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை நுகர்வோர்களுக்கு அந்த நிறுவனங்கள் முறையாகக் கூறாத குற்றத்துக்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்பீரியல் டொபேக்கோ, ரோத்மன்ஸ் பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் மற்றும் ஜேடிஐ மெக்டொனால்ட் ஆகிய சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் மீது இந்த தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டே இதுதொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் மிகச் சமீபத்தில்தான் அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டு வரலாற்றில் இந்த அள வுக்குப் பெரிய அபராதத் தொகை தண்டனையாக விதிக்கப்பட்ட தில்லை என்று கூறப்படுகிறது.
புகைப்பதால் ஏற்படும் பாதிப்பு களை தங்கள் தயாரிப்புகள் மூலம் முறையாக நுகர்வோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை என்று மேற்கண்ட நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிறுவனங்கள், மேல் முறையீடு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
"கனடாவில் சிகரெட் பாக் கெட்டுகளில் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடந்த 40 ஆண்டுகளாக எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது" என்று ஜேடிஐ மெக்டொனால்ட் நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.