பிரிட்டனின் குண்டு மனிதர் மரணம்

பிரிட்டனின் குண்டு மனிதர் மரணம்
Updated on
1 min read

பிரிட்டனில் அதிக உடல் பருமன் கொண்டிருந்த இளைஞர், கார்ல் தாம்சன் உயிரிழந்தார்.

பிரிட்டனின் தென்கிழக்குப் பகுதியில் கென்ட் நகரம் உள்ளது. அந்த நகரைச் சேர்ந்தவர் கார்ல் தாம்சன். 33 வயதான அவரின் எடை 412 கிலோ. அளவுக்கு அதிக மான உடல் எடையால் அவரால் நடக்க முடியாது. அவரது உதவிக்கு எப்போதும் இரண்டு பேர் உடன் இருந்தனர். பிரிட்டனில் அதிக உடல் பருமன் கொண்ட மனிதராக அவர் கருதப்பட்டார்.

தனது 17 வயதில் கென்ட் பகுதியில் உள்ள ஹோட்டலில் கார்ல் தாம்சன் பணியாற்றி வந்தார். அப்போது ஹோட்டலில் விற்காத பொருட்கள் அனைத்தையும் சாப்பிட்டு விடுவாராம். அப்போது முதலே அவரது உடல் எடை தாறுமாறாக அதிகரித்தது.

அதன்பின்னர் அவரால் வேலைக்குச் செல்ல முடிய வில்லை. கடந்த ஓராண்டாக வீட்டிலேயே முடங்கி இருந்தார். அவர் உடனடியாக 285 கிலோ உடல் எடையைக் குறைத்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்று டாக்டர்கள் எச்சரித்தனர். அதற்காக அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனாலும் அவரது உடல் எடை குறையவில்லை.

நாள்தோறும் 10 ஆயிரம் கலோரி அளவுக்கு அவர் உணவுகளை உட்கொண்டார். அதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in