முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வார் மோடி: பாகிஸ்தான் நாளிதழ் கருத்து

முஸ்லிம்களை அரவணைத்துச் செல்வார் மோடி: பாகிஸ்தான் நாளிதழ் கருத்து
Updated on
1 min read

முஸ்லிம்களையும், பக்கத்து நாடான பாகிஸ்தானையும் நரேந்திர மோடி பகைத்துக் கொள்ள மாட்டார். இணக்கமான முறையில் அனைவரையும் அர வணைத்துக் கொண்டு ஆட்சி நடத்துவார் என்று பாகிஸ்தானி லிருந்து வெளியாகும் ‘டெய்லி டைம்ஸ்’ பத்திரிகை கருத்துத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அப்பத்திரி கையில் வெளியான செய்தி: முந்தைய பாஜக கூட்டணியின் (வாஜ்பாய் தலைமையிலான) ஆட்சியில் பாகிஸ்தானுடன் இணக்கமான நல்லுறவைப் பேண நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே வழிமுறையை மோடியும் பின்பற்றுவாரா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் கூறும்.

அதே சமயம், பாஜகவின் இந்துத்துவக் கொள்கையால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் கவலையடைந்துள்ளதும் உண் மையே. மத ரீதியான வன்முறை, மத அடிப்படைவாதம் ஆகியவை தொடர்பாக தன் மீது கூறப்பட்ட புகார்கள் அனைத்தையும் புறந் தள்ளி, தனிப் பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைக்கக் கூடிய நிலையை மோடி அடைந்துள்ளார். 1984-ம் ஆண்டு ராஜீவ் காந்தி தலைமையில் அமைந்த ஆட்சிக் குப் பின்பு, இந்தியாவில் இப்போதுதான் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமையவுள்ளது.

மோடி, தன் மீது மக்களுக்கு நல்லெண்ணம் ஏற்பட திட்டமிட்டு உழைத்துள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக அதற்காக தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் குஜராத் 8 சதவீத வளர்ச்சியைஎட்டி யுள்ளது. இதே காலகட்டத்தில் தமிழ்நாடு 8.6 சதவீதமும், பிஹார் 15 சதவீதமும் வளர்ச்சியை எட்டியுள்ளன. காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசுக்கு எதிராக மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி, வாரிசு அரசியல் போன்றவற்றால், அக்கட்சி படுதோல்வியை சந்தித் துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in