Published : 10 May 2014 10:00 AM
Last Updated : 10 May 2014 10:00 AM

அமெரிக்காவுக்கு புல்லட் ரயில் இயக்க சீனா திட்டம்: 13,000 கி.மீ நீளத்துக்கு ரயில் பாதை

அமெரிக்காவுக்கு புல்லட் ரயில் இயக்குவதற்காக ரஷியா, கனடா வழியாக 13,000 கி.மீ. நீளத்துக்கு ரயில் பாதை கட்டமைப்பை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. இது செயல்பாட்டுக்கு வந்தால் உலகின் மிக நீளமான ரயில் பாதை என்ற சாதனை படைக்கும்.

இதுகுறித்து சீன பொறியியல் கல்வி நிறுவனத்தின் சுரங்கப்பாதை மற்றும் ரயில்வே துறை நிபுணர் வாங் மெங்ஷு கூறியதாவது:

சீனா - அமெரிக்கா இடையே புல்லட் ரயில் இயக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்தத் திட்டத்துக்கு 'சீனா-ரஷியா பிளஸ் அமெரிக்கா லைன்' என பெயரிடப்பட்டுள்ளது. இது சீனாவின் வடகிழக்கில் தொடங்கி ரஷியாவின் கிழக்கு சைபீரியா, தி பெரிங் ஜலசந்தி, அலாஸ்கா, கனடா வழியாக அமெரிக்காவைச் சென்றடையும்.

ரஷியா அலாஸ்கா இடையி லான பெரிங் ஜலசந்தியைக் கடப்பதற்காக சுமார் 200 கி.மீ. தூரத்துக்கு கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டியிருக் கும். இந்த ரயில் மணிக்கு சராசரி

யாக 350 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும். இதன் படி, சீனாவிலிருந்து 2 நாளில் அமெரிக்காவுக்கு சென்றடைய லாம். அதிக அளவில் ரயில் போக்குவரத்தை நம்பியுள்ள ரஷியாவும் இந்தத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

சுமார் 10,000 கி.மீ. தொலைவு கொண்டது டிரான்ஸ்-சைபீரியா ரயில்வே இணைப்பு திட்டம். அடுத்த மாதம் தொடங்க உள்ள இந்தத் திட்டம் சீனாவை மியான் மர், லாவோஸ், வியட்நாம், கம் போடியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூரை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதைவிட 3,000 கி.மீ. கூடுதல் தூரம் கொண்டது சீனாவின் புதிய திட்டம்.

இதற்கிடையே, ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் இதுபோன்ற மெகா திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆழமாக சிந்திக்க வேண் டும் என இத்துறை சார்ந்த சில அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x