

ஸ்பெயினை சேர்ந்த மரியா துரான் (54). இவர் தனக்கு சூரிய னில் நிலம் உள்ளதாக 2010-ம் ஆண்டு முதல் கூறி வருகிறார்.
இந்நிலையில் ஸ்பெயினின் உள்ள ஒரு ரோட்டரி பப்ளிக் அலுவலகத்தில் சமீபத்தில் சூரியனை தனது பெயரில் பதிவு செய்தார்.
இணையதளத்தில் பொருட் களை விற்பனை செய்யும் நிறுவன மான இபே-யில் இலவசமாக கணக்கு தொடங்கிய மரியா, சூரியனை பிளாட் போட்டு விற்க இருப்பதாகவும், ஒரு சதுர அடியின் விலை ஒரு யூரோ என்றும் அதில் விளம்பரம் வெளியிட்டார்.
இபே நிறுவனத்தினரின் இல்லாத ஒரு பொருளை விற்பதாக விளம்பரம் செய்வது தங்கள் நிறுவன விதிகளுக்கு முரணானது என்று கூறி மரியாவின் விளம்பரத்தை நீக்கிவிட்டது.
இதையடுத்து கோபமடைந்த மரியா இபே நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.