

ஆப்கானிஸ்தானில் ஹெராத் மாகாணம் கரோக் பகுதியில் ராணுவத்துக்கு தேவையான பொருட்களை வாகனங்களில் ராணுவ வீரர்கள் எடுத்துச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வாகனங்களை சுற்றி வளைத்த தலிபான்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 11 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ அமைப்பின் ராணுவம் வெளியேறிய பிறகும் அங்கு தலிபான்கள் தாக்குதல் தொடர்கிறது.