சீக்கிய இளைஞர் ராணுவப் பயிற்சியில் தலைப்பாகையுடன் பங்கேற்கலாம்: அமெரிக்க நீதிமன்றம் அனுமதி

சீக்கிய இளைஞர் ராணுவப் பயிற்சியில் தலைப்பாகையுடன் பங்கேற்கலாம்: அமெரிக்க நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

அமெரிக்க ராணுவ பயிற்சியில் சீக்கிய இளைஞர் தலைப்பாகை, தாடியுடன் பயிற்சி பெறலாம் என்று நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அந்த நாட்டு முப்படைகளின் சார்பில் தனித்தனியாக ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது. லாங் தீவில் உள்ள ஹோப்ஸ்ட்ரா பல்கலைக்கழக மாணவரான இக்னூர் சிங் (20), இந்தப் ராணுவ பயிற்சியில் சேர விண்ணப்பித்தார்.

சீக்கியரான அவர் தலைப்பாகை, தாடியுடன் பயிற்சி பெற அனுமதி கோரினார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் நியூயார்க் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி ஆமி பெர்மன் ஜாக்ஸன் விசாரித்து இக்னூர் சிங்குக்கு ஆதரவாக உத்தரவிட்டுள்ளார். சீக்கிய மத வழக்கப்படி தலைப்பாகை, தாடியுடன் இக்னூர் சிங் ராணுவ பயிற்சி பெறலாம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, இது சீக்கிய மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. வருங்காலத்தில் அமெரிக்க ராணுவத்தில் புலனாய்வுத் துறை அதிகாரியாக வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in