

கொக்கி கை தீவிரவாதிக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் அபு ஹம்சா அல்-மஸ்ரி (56). இவர் படிப்புக்காக லண்டனில் குடியேறி அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு விபத்தில் 2 கைகள், ஒரு கண் பார்வையை அபு ஹம்சா இழந்தார். அதன் பின்னர் அவர் தனது ஒரு கையில் இரும்பிலான கொக்கியை அணிந்தார்.
1990- களில் வடக்கு லண்டனில் உள்ள பின்ஸ்பரி பார்க் மசூதியில் இமாம் ஆகப் பணியாற்றிய அபு ஹம்சா அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு நாசவேலை களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப் பட்டது. அதன்பேரில் 2012-ல் அவர் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
யேமன் நாட்டில் 4 வெளிநாட் டினரை தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்த சம்பவம், அமெரிக்காவின் ஓரிகானில் அல்-காய்தா தீவிரவாத பயிற்சி மையத்தை அமைக்க ஆள்களை அனுப்பியது, ஆப்கானிஸ்தா னுக்கு தீவிரவாதிகளை பயிற் சிக்கு அனுப்பியது உள்பட அபு ஹம்சா மீது 11 வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளின் விசா ரணை நியூயார்க் நகர நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது. 11 வழக்குகளிலும் அபு ஹம்சா குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம் அவருக்கு 100 ஆண்டு கள் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் இந்திய வம்சா வளியைச் சேர்ந்த அட்டர்னி பிரீத் பகாரா மிகச் சிறப்பாகச் செயல்பட்டு அபு ஹம்சாவுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளதாக அமெரிக்க நாளிதழ்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.