பாகிஸ்தானில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Updated on
1 min read

பாகிஸ்தானின் லாகூர் நகரில், தற்கொலைப்படை தீவிரவாதி உட்பட 4 தீவிரவாதிகள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

லாகூர் நகரில் ரச்னா எனும் இடத்தில் போலீஸார் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது தற்கொலைப்படை தீவிரவாதி உட்பட 4 தீவிரவாதிகள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முன்னதாக, மற்றொரு தற்கொலைப் படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டை இயக்கியதில் போலீஸ்காரர் ஒருவர் உட்பட 9 பேர் காயமடைந்தனர் என ஜியோ நியூஸ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திலிருந்து தீவிரவாதிகள் பயன்படுத்திய தற்கொலைப்படையினர் பயன்படுத்தும் உடலுடன் கட்டிக்கொள்ளும் குண்டு அடங்கிய மேலாடை, ராக்கெட் லாஞ்சர், பிஸ்டல்கள், இரண்டு லேப்டாப்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in