பாகிஸ்தான் ஒரு மிகப்பெரிய அணு ஆயுத நாடு: முஷாரப் எச்சரிக்கை

பாகிஸ்தான் ஒரு மிகப்பெரிய அணு ஆயுத நாடு: முஷாரப் எச்சரிக்கை
Updated on
1 min read

பாகிஸ்தானின் உறுதித்தன்மையை தொடர்ந்து இந்தியா கெடுத்து வருகிறது என்று கூறிய பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், பாகிஸ்தானை அணுசக்திநீக்கம் செய்ய இந்தியா தனது ஆக்ரோஷமான உத்திகளால் முயன்று வருகிறது என்று குற்றம்சாட்டினார்.

துனியா நியூஸிற்கு அவர் அளித்த பேட்டியின் போது, “அணுத்திறன்களை நாங்கள் பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால், எங்கள் இருப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகும் போது நாங்கள் யாருக்காக இந்த அணு ஆயுதங்களை வைத்துள்ளோம்?

எங்கள் மீது தாக்குதல் தொடுக்க வேண்டாம், எங்களது நாட்டு பிரதேச ஒற்றுமைகளுக்கு சவால் ஏற்படுத்த வேண்டாம், ஏனெனில் நாங்கள் ஒன்றும் சிறிய நாடல்ல, நாங்கள் பெரிய அணுத்திறன் நாடு. எங்களைத் தள்ளாதீர்கள்.

பாகிஸ்தானை அணுத்திறன் நீக்கம் செய்ய (இந்தியா) காணும் கனவு சாத்தியமல்ல என்பதில் நாம் உறுதியாக இருப்பது அவசியம். அவர்களது இறுதி ஆட்டம் நிறைவேறாமல் செய்ய வேண்டும்” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார் முஷாரப்

பாகிஸ்தானில் 120 அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் காலங்களில் 200க்கும் மேற்பட்ட அணுசக்தி ஆயுதங்களை உற்பத்தி செய்யும் திறன் பாகிஸ்தான் 2020-ம் ஆண்டில் பெற்று விடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பயங்கரவாதிகளை ஒழிக்க எல்லைக்கு அப்பாலும் செல்வோம் என்று இந்தியா, பாகிஸ்தானை எச்சரித்தையடுத்து முஷாரப் இவ்வாறு பதில் கூறியதாக தெரிகிறது.

இந்த வாரத்தில் நாகா போராளிகளை கொல்வதற்காக மியான்மரின் எல்லைப்பகுதியில் குறிப்பிடத்தகுந்த ராணுவ நடவடிக்கைகளை இந்திய ராணுவம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பையும் தன் பங்குக்கு இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தினார் முஷாரப்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in