

ஆன்மிகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கொலம்பியாவில் குடிமக்களுக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தனது வாழும் கலை அமைப்பின் மூலம், அமைதிக்காக ஆற்றிய பணிக்காக, இவ்விருதை நாடாளுமன்ற பிரபுக்கள் சபை தலைவர் பாபியோ ரவுல் அமின் சலீம் வழங்கினார்.
விருதை ஏற்றுக் கொண்ட ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், “கொலம்பியாவில் நடைபெறும் மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து அமைதி ஏற்படுத்த என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்” எனத் தெரிவித்தார்.
“கடந்த 8 ஆண்டுகளாக வாழும் கலை அமைப்பு மூலம் இந்நாட்டில் ஆற்றி வரும் பணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என சலீம் தெரிவித்தார்.