கருப்புப் பண பதுக்கல் விவகாரம்: 2 இந்தியர்கள் பற்றிய கூடுதல் விவரத்தை வெளியிட்டது சுவிட்சர்லாந்து

கருப்புப் பண பதுக்கல் விவகாரம்: 2 இந்தியர்கள் பற்றிய கூடுதல் விவரத்தை வெளியிட்டது சுவிட்சர்லாந்து
Updated on
2 min read

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி உள்ள 2 இந்தி யர்களைப் பற்றிய கூடுதல் விவரங் களை அந்நாட்டு அரசு வெளி யிட்டுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலரது பெயர் களும் வெளியாகி உள்ளன.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப் பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, சட்ட விரோதமாக வரி ஏய்ப்பு செய்து முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பெயர் பட்டியலை வழங்குமாறு சுவிஸ் அரசை இந்தியா தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

இதுபோல பிற நாடுகளும் கோரி வருகின்றன. இதையடுத்து, சுவிஸ் வங்கிகளின் வெளிநாட்டு வாடிக்கையாளர்களைப் பற்றிய ரகசியங்களை காப்பது என்ற தனது கட்டுப்பாட்டை அந்நாட்டு அரசு தளர்த்த ஆரம்பித்துள்ளது. இதன்படி வரி விவகாரங்களில் பரஸ்பரம் முதலீட்டாளர்களின் விவரங்களை பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளது.

பல்வேறு நாடுகளின் கோரிக் கையை ஏற்று, கடந்த சில தினங்க ளுக்கு முன்பு கருப்பு பணம் பதுக்கிய பல வெளிநாட்டு வாடிக் கையாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டது. இதில், சையது முகமது மசூத் மற்றும் சந்த் கவுசர் முகமது மசூத் ஆகிய 2 பேரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இவர்களைப் பற்றிய சில விவரங்களை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், வெளிநாட்டு அரசுகள் சுவிஸ் மத்திய வரி நிர்வாக அமைப்புக்கு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அரசிதழில் மேலும் 2 அறிவிக்கை களை சுவிஸ் அரசு நேற்று வெளி யிட்டது. அதில் பனாமா, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர் களின் பெயர்கள் இடம்பெற் றுள்ளன. மேலும், ஏற்கெனவே வெளியிடப்பட்ட 2 இந்தியர்களின் பெயர்களும் இந்த புதிய அறி விக்கையில் இடம்பெற்றுள்ளன.

இவர்களுடன் தொடர்புடைய தாகக் கூறப்படும் பஹாமஸைச் சேர்ந்த வார்ஃப் நிறுவனத்தின் பெயரும் புதிய அறிவிக்கையில் இடம்பெற்றுள்ளது. சையது மசூத், கவுசர் மசூத் ஆகிய இருவரும் மும்பையில் நடத்திய மோசடி சீட்டு நிறுவனங்கள் தொடர்பாக நீண்ட காலமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அமலாக்கத் துறை கேட்டுக் கொண்டதையடுத்து சுவிட்சர் லாந்தில் உள்ள இவர்களது சில கணக்குகள் சில ஆண்டுகளுக்கு முன்பு முடக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், இரு மசூத்களையும் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலனளிக்கவில்லை.

இதுவரையில் 7 இந்தியர்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் வெளிநாடுகளில் முகாமிட்டு செயல்படும் 6 நிறு வனங்களின் பெயர்களும் இந்த அறிவிக்கையில் வெளியாகி உள் ளது. இந்த நிறுவனங்கள் தொடர் பான விவரங்களை இந்திய வருமான வரி அதிகாரிகள் கோரி இருந்தனர்.

இந்த நிறுவனங்களுக்கும் இந்தியர்களுக்கும் அல்லது இந்தியாவில் உள்ள நிறுவனங் களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வரித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மோகோபான் லிமிடெட், சோர்வுட் டெவலப்மென்ட் (இந்த இரு நிறுவனங்களும் பிரிட்ட னின் வர்ஜின் தீவுகளில் உள்ளன), மற்றும் கைனடிக் ஹோல் டிங்ஸ் லிமிடெட் (சேனல் தீவுகள்), அலிய மேனேஜ்மென்ட் லிமிடெட் (பஹாமாஸ்) அன்ரிட் எல்எல்சி (அமெரிக்காவின் நியு கேசல் மாவட்டம்) ஆகியவே இந்த நிறுவனங்களில் குறிப்பிடத்தக் கவை ஆகும்.

இந்த நிறுவனங்கள் தொடர்பான சில தகவல்களை இந்திய அதிகாரி களுக்கு சுவிஸ் மத்திய வரி நிர்வாகம் வழங்கி உள்ளது. ஆனால் இது தொடர்பான விவரம் அறிவிக்கையில் தெரிவிக்கப் படவில்லை. ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதால் சம்பந்தப் பட்டவர்களிடம் பகிர்ந்துகொள் ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெரும்பாலான கோரிக்கைகள், நிதி அமைச்ச கத்தின் வெளிநாட்டு வரி மற்றும் வரி ஆய்வு பிரிவின் மூலம் விடுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப் பட்டவர்களுக்கு சட்ட ரீதியில் தீர்வு காண்பதற்கான வாய்ப்பை தேடிக் கொள்வதற்காகவே அவர்களது பெயர்கள் அரசி தழில் வெளியிடப்படுகின்றன என்று சுவிஸ் அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in