

சிரியாவின் பால்மிரா பகுதியில் பழங்கால 2 முஸ்லிம் கல்லறை களை ஐ.எஸ். தீவிரவாதிகள் அழித்ததாக அந்நாட்டின் தொல்பொருள் துறை இயக்குநரான மாமூன் அப்துல்கரீம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று கூறும்போது, “இறைத் தூதர் முகம்மது நபியின் உறவினர் வழி வந்த முகம்மது பின் அலி மற்றும் பால்மிராவின் மதத் தலைவர் நிஜார் அபு பகாயெதின் ஆகியோரின் கல்லறை மாடங்களை 3 நாட்களுக்கு முன்பு ஐ.எஸ். தீவிரவாதிகள் வெடி வைத்து தகர்த்தனர்” என்றார்.
மத்திய சிரியாவில் பால்மிரா பகுதியில் முகம்மது பின் அலியின் கல்லறை உள்ளது. நிஜார் அபுவின் கல்லறை, பால்மிராவின் பழங்கால நினைவுச் சின்னங் களுக்கு அருகில் உள்ளது. சிரியா வில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி யில் சுமார் 50 பழங்கால கல்லறை களை ஐ.எஸ். அழித்துள்ளது.
இதுகுறித்து அப்துல் கரீம் கூறும்போது, “ஐ.எஸ். அமைப்பி னர் இந்த கல்லறைகள் தங்கள் நம் பிக்கைக்கு எதிரானதாக கருதுகின்ற னர். எனவே இங்கு மக்கள் செல் வதற்கு தடை விதித்துள்ளனர்” என்றார்.