

ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படை வீரர்களின் எண்ணிக்கை அடுத்த ஆண்டில் 9,800 ஆகக் குறைக்கப்படும் என்றும் 2016 இறுதியில் அனைவரும் வாபஸ் பெறப்படுவார்கள் என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவம் உள்ளிட்ட நேட்டோ படையினரின் எண் ணிக்கை 2015-ம் ஆண்டு தொடக் கத்தில் 9,800 ஆகக் குறைக்கப்படும். 2015-ம் ஆண்டின் இறுதியில் இந்த எண்ணிக்கை மேலும் பாதி யாகக் குறைக்கப்படும். பின்னர் 2016-ம் ஆண்டு இறுதியில் நேட்டோ படை முழுவதும் வாபஸ் பெறப்படும்.
அதன் பிறகு இராக்கைப் போல ஆப்கன் தலைநகர் காபுலில் பாதுகாப்பு உதவி பிரிவு டன் கூடிய அமெரிக்க தூதரம் மட்டுமே செயல்படும். ஆப் கானிஸ்தானின் எதிர்கால வளர்ச்சிக்கு சர்வதேச சமுதாயம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும். போரை மையமாக வைத்து அப்கனுடனான அமெரிக்க உறவு அமையாது. நிதி, வளர்ச்சி மற்றும் ராஜதந்திரம் ஆகிய அனைத்து வகையிலும் அந்த நாட்டுக்கு தேவையான உதவி வழங்கப்படும்.
எனினும், இரு நாடுகளும் ஏற்கெனவே மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் அடிப்படை யில், இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந் தத்தில் ஆப்கன் கையெழுத்திட் டால் மட்டுமே நேட்டோ படை படிப்படியாக வாபஸ் பெறப்படும். ஆப்கனின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் அதே வேளை யில், இந்த ஒப்பந்தம் மிகவும் அவசியம்.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அதிபர் தேர்தலில் போட்டி போடும் இரு முக்கிய தலைவர்களும் உறுதி அளித்துள்ளனர். எனவே, அவர்கள் சொன்னபடி நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்றார். ஒபாமாவின் இந்த அறிவிப்பை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, பாதுகாப்பு அமைச்சர் சக் ஹேகல் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் எம்.பி.க்களும் வரவேற்றுள்ளனர்.