

சன்னி பிரிவு முஸ்லிகளுக்கு ஆதர வாக ஏமனில் உள்ள ஷியா பிரிவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா கடந்த மார்ச் மாதம் முதல் வான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று சவுதி அரேபிய எல்லைப் பகுதியில் முன்னாள் அதிபர் அலி அப் துல்லா சலேவுக்கு ஆதரவான ராணு வத்தினர் மற்றும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இணைந்து நேற்றுமுன்தினம் இரவு கடுமை யான தாக்குதல் நடத்தினர். இதில் சவுதியை சேர்ந்த 4 பேரும், ஏமனைச் சேர்ந்த சவுதி ஆதரவாளர் கள் பலரும் கொல்லப்பட்டனர். ஏமனில் சவுதி அரேபியா தாக்குதல் நடத்திய பிறகு அங்கிருந்து சவுதிக்கு அளிக்கப்பட்ட முதல் பெரிய அளவிலான பதிலடி தாக்குதல் இது. இதையடுத்து ஏமன் மீதான தாக்குதலை சவுதி அரேபியா அதிக ரித்துள்ளது. ஏமனின் ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்து வருகின்றனர். இதனால் அங்கு அதிக உயிரிழப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
சவுதி அரேபியா இதுவரை ஏமனில் நடத்திய வான் தாக்குதலில் ஏற்கெனவே ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறி யுள்ளனர்.
ஏவுகணைகள் வீழ்த்தப்பட்டன
இதனிடையே ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஸ்கட் ரக ஏவுகணை களை வானிலேயே சுட்டு வீழ்த்தி விட்டதாக சவுதி அரேபிய ராணு வம் அறிவித்துள்ளது.
ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இரவு 3 மணியளவில் இரு ஸ்கட் ஏவு கணைகளை சவுதியை நோக்கி செலுத்தினர். சவுதி ராணுவத்தினர் அவற்றை பேட்ரியாட் ஏவுகணை மூலம் தடுத்து வானிலேயே அழித்துவிட்டனர் என்று சவுதி பிரஸ் ஏஜென்ஸி தெரிவித்துள்ளது. சவுதியில் ஏராளமான எண்ணெய் கிணறுகள் உள்ளன. ஏமனில் இருந்து வரும் ஏவுகணைகள் எண் ணெய் கிணறுகள் மீது விழுந்தால் பெரும் சேதம் ஏற்படும்.
ஏமனில் ஷியா பிரிவினர் பெரும் பான்மையாக உள்ளனர். அங்கு அதிபராக இருந்த சன்னி பிரிவைச் சேர்ந்த மன்சூர் ஹதியை ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை ஆட்சியில் இருந்து அகற்றினர். இதையடுத்து சன்னி பிரிவுக்கு ஆதரவாக சவுதி அரேபியா சண்டையில் இறங்கி யது. ஷியா பிரிவினர் அதிகமுள்ள ஈரான், ஹவுத்தி கிளர்ச்சியாளர் களுக்கு மறைமுகமாக ஆதர வளித்து வருகிறது.