

சீனாவில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆயிரம் கைகள் கொண்ட புத்தர் சிலை ஒன்றை அந்நாட்டு அரசு மீண்டும் புனரமைத்துள் ளது.
சீனாவில் சிசுன் மாகாணத்தில் உள்ளது 'கியான்ஷு குவானின்' எனும் புத்தர் சிலை. ஆயிரம் கைகள் உடைய இந்த சிற்பம் தென்னக சாங்க் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது.
7.7 மீட்டர் உயரமும், 12.5 மீட்டர் அகலமும் கொண்ட இந்த சிற்பம், வரலாற்றில் இதுவரை நான்கு முறை பழுது பார்க்கப்பட்டு மீண்டும் புனரமைக்கப்பட்டிருக்கிறது.
இதனுடைய 830 கைகளும் அவற்றில் ஏந்தப்பட்ட 227 கருவிகளும் சிதிலமடைந்திருந்தன. அதனை புனரமைப்பதற்காக 2008ம் ஆண்டு பணிகள் தொடங்கின. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 60 மில்லியன் யுவான் (சுமார் ரூ.60 கோடி) செலவில் 10 லட்சம் தங்கத் தகடுகளைக் கொண்டு புனரமைக்கப்பட்டுள்ளது.இந்த சிற்பத்தை தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது பழுதுகள் நீக்கி புனரமைத்து அடுத்த 800 ஆண்டுகளுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று சீனா கூறியுள்ளது.