ஜிண்டால்: அமெரிக்க அதிபர் ரேஸ் களத்தில் முதல் இந்திய வம்சாவளி

ஜிண்டால்: அமெரிக்க அதிபர் ரேஸ் களத்தில் முதல் இந்திய வம்சாவளி
Updated on
1 min read

அமெரிக்காவின் லூசியானா மாகாண ஆளுநரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான பாபி ஜிண்டால் (44) அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக தன்னிச்சையாக அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்த ஜிண்டால், நியூ ஆர்லியன்ஸ் நகரில் நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

என்னுடைய பெயர் பாபி ஜிண்டால். இப்போது லூசியானா மாகாண ஆளுநராக உள்ள நான், உலகின் புகழ்பெற்ற அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளேன். கட்சியின் அனுமதியின்றி இந்த முடிவை எடுத்துள்ளேன்.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் மற்றவர்களைவிட எனது அணுகு முறை மாறுபட்டதாக இருக்கும். அமெரிக்கா உலக அரங்கில் புகழ் பெற்று விளங்குவதற்கு மாறுபட்ட சிந்தனை உடைய மக்கள்தான் காரணம். அதிகம் பேசும் மக்கள் அல்ல.

அதிகம் பேசும் ஏராளமானவர் கள் அதிபர் தேர்தலில் ஏற்கெனவே போட்டியிட்டிருக்கிறார்கள்.ஆனால், அவர்களில் யாரும் எங்களுக்கு நிகராக முடியாது. அவர்களது சிறந்த பேச்சு நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவியிருந் தால் இந்நேரம் நாம் பிரச்சினையி லிருந்து மீண்டிருப்போம்.

இப்போது வெள்ளை மாளிகை யில் இருப்பவர் (அதிபர் பராக் ஒபாமா) சிறந்த பேச்சாளர். நம் நாட்டில் ஏராளமான பேச்சாளர் கள் இருக்கிறார்கள். ஆனால், திறமையாக செயல்படக்கூடியவர் தான் இப்போதைக்கு தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2016) நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போதைய அதிபர் ஒபாமா, இருமுறை பதவி வகித்துவிட்ட நிலையில் 3-வது முறையாக போட்டியிட இயலாது. எனவே அவரது ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் கிளிண்ட னின் மனைவியும், முன்னாள் வெளி யுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் எச். டபிள்யு புஷ் மகனும், ஜார்ஜ் டபிள்யு புஷ் சகோதரருமான ஜெப் புஷ் போட்டியிடுவார் என தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் தான் போட்டியிடப் போவதாக பாபி ஜிண்டால் அறிவித்துள்ளார்.

இக்கட்சியைச் சேர்ந்த மேலும் 11 பேர் களத்தில் குதிக்க விரும்புவ தால், கட்சிக்குள் நடைபெறும் அதிபர் வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெறுபவர்தான் அக்கட்சி யின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக பேட்டியிட முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in