Published : 26 Jun 2015 10:34 AM
Last Updated : 26 Jun 2015 10:34 AM

சீன வெளியுறவு அமைச்சருடன் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு: பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டது குறித்து இந்தியாவின் அதிருப்தியை தெரிவித்தார்

பயங்கரவாதி லக்வியை பாகிஸ் தான் விடுவித்ததற்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா முறையிட்டது. ஆனால், அப்போது பாகிஸ்தா னுக்கு ஆதரவாக சீனா செயல் பட்டது. இதுதொடர்பாக, நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் சீன வெளியுறவு அமைச்சரைச் சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இப்பிரச்சினை குறித்து அவரிடம் விவாதித்தார்.

நேபாளத் தலைநகர் காத் மாண்டுவில், சர்வதேச நன் கொடையாளர்கள் மாநாடு நடை பெற்றது. நிலநடுக்கத்தால் பாதிக் கப்பட்ட நேபாளத்தை சீரமைக்க நிதியுதவி கோரி இம்மாநாட்டை நேபாளம் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் பங்கேற்ற இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியைச் சந்தித்து இதுதொடர்பாக விவாதித்தார். 166 பேர் கொல்லப்பட்ட மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய மூளையாகச் செயல்பட்ட லக்வி சாதாரண தீவிரவாதி அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியுறவு செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது:

ஐ.நா.வுக்குக் கொண்டு செல்லப்பட்ட ஸகியுர் ரஹ்மான் லக்வி விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு தொடர்பாக சீன அமைச்சரிடம் சுஷ்மா பேசினார். இந்தியாவும், சீனாவும் தீவிர வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, நல்ல தீவிரவாதிகள், கெட்ட தீவிரவாதிகள் என்ற வேறுபாடு காட்டுவதற்கில்லை என சுஷ்மா அவரிடம் தெரிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் நல்லுறவில் இருந்து இச்செயல்பாடு மாறுபட்டு அமைகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த வாங், அனைத்துவிதமான தீவிரவாதத் தையும் சீனா எதிர்க்கிறது. லக்வி விவகாரம் தொடர்பாக சீனா ஆலோசனை நடத்தும். இரு நாடுகளும் இணைந்து தீவிர வாதத்தை எதிர்க்கும் என உறுதியளித்தார். இவ்வாறு விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.

இம்மாநாட்டில், சீனா, பிரிட்டன், நார்வே, ஜப்பான், இலங்கை, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா., உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

நேபாளத்துக்கு ரூ. 6,000 கோடி உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இந்தியா 100 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 6,360 கோடி) நிதியுதவி அளிக்கும் என உறுதியளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்ட சுஷ்மா ,” இயற்கைப்பேரிடர் பாதிப்பிலிருந்து மீண்டு வலிமையான ஒன்றிணைந்த மேலும் நம்பிக்கை மிகுந்த தேசமாக நேபாளம் எழுச்சிபெறும்.

இந்தியா வழங்கும் நிதியுதவியில், நான்கில் ஒருபங்கு தொகை, நன்கொடையாக இருக்கும். மேலும், ரூ.6,000 கோடி அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக வழங்கப்படும். இந்தியாவின் மொத்த நிதியுதவி சுமார் ரூ.12 ஆயிரம் கோடியாக இருக்கும்.

இந்தியாவின் 125 கோடி மக்களும், தனிப்பட்ட முறையில் பிரதமரும் நேபாளத்தின் ஒவ்வொரு குடிமகனின் கண்ணீரையும் துடைக்க உறுதி பூண்டுள்ளனர். இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பாகக் கருதியே, நாங்கள் செயல்பட்டோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x