ஜப்பானில் வாக்குரிமை வயது 20-லிருந்து 18-ஆக குறைப்பு: முக்கியச் சட்டம் நிறைவேற்றம்

ஜப்பானில் வாக்குரிமை வயது 20-லிருந்து 18-ஆக குறைப்பு: முக்கியச் சட்டம் நிறைவேற்றம்

Published on

ஜப்பானில் 18 வயதுடையவர்கள் வாக்களிக்கும் உரிமை பெறுவதற்கான சட்டம் முழு ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.

ஜப்பான் மக்கள் தொகையில் 24 லட்சம் பேர் 18-லிருந்து 19 வயதுக்குள் இருக்கின்றனர். இவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அளிப்பதன் மூலம் அரசியலில் இளைஞர்களுக்கு ஈடுபாட்டை ஏற்படுத்தி ஆரோக்கியமான அரசை தேர்தெடுப்பதற்கு மிக முக்கிய சட்டம் நிறைவேறியுள்ளது.

தற்போதைய நிலையில் 20 வயது மிக்கவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் அதிகாரம் அங்கு உள்ளது.

இந்தச் சட்டத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆதரவு கிடைத்தது. ஜப்பானில் அடுத்த ஆண்டு மேலவைக்கான தேர்தல் நடக்க உள்ள நிலையில், முதல் முறை வாக்களிக்கப் போகும் புதிய இளம் வாக்காளர்களால் அரசியலில் குறிப்படத்தக்க மாற்றம் ஏற்படும் என்று பெரிதும் நம்பப்படுகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானில் வாக்களிக்கும் உரிமைக்கான வயது 25-லிருந்து 20 ஆகக் குறைக்கப்பட்டது.

கடந்த சில பத்து ஆண்டுகளாக பிறப்பு விகிதம் குறைந்திருப்பதன் காரணமாக, மக்கள் தொகையின் பெரும்பாலானோர் 65 வயதுக்கு மேலானவர்களாக உள்ளனர். அதனால் அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலுமே இளைஞர்களின் செயல்பாடுகள் இல்லாமல் உள்ளது. தற்போது இளைஞர்களுக்கு உரிமை அளிக்கும் சட்டம் நிறைவேறி இருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in