Published : 12 Jun 2015 11:01 AM
Last Updated : 12 Jun 2015 11:01 AM

போர்ச்சுகல் கிராமத்தில் குழந்தை பெற்றால் ரூ.3.50 லட்சம்: மக்கள்தொகையை அதிகரிக்க புதிய முயற்சி

போர்ச்சுகல் கிராமத்தில் குழந்தை பிறப்பு கணிசமாக குறைந்துள்ளது. அதனால் குழந்தை பிறந்தால் பெற்றோருக்கு அரசு ரூ.3.50 லட்சம் நிதியுதவி தருகிறது.

போர்ச்சுகல் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது அல்கோடிம் கிராமம். ஸ்பெயின் நாட்டின் எல்லையில் உள்ளது. இங்கு குழந்தை பிறப்பு கணிசமாக குறைந்துவிட்டது. கிராமமே வெறிச்சோடி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் மூன்று பங்கு மக்கள் தொகை குறைந்துள்ளது.

போர்ச்சுகலின் குழந்தை பிறப்பு ஒரு பெண்ணுக்கு 1.21 சதவீத மாக உள்ளது. ஆனால், நாட்டி லேயே அல்கோடிம் கிராமத்தில் மிக மிக குறைந்தபட்சமாக ஒரு பெண்ணுக்கு 0.9 சதவீதமாக உள்ளது. இது ஐரோப்பிய யூனியனிலேயே மிகக் குறைவு.

இதனால் போர்ச்சுகல் அரசு கவலையில் உள்ளது. ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை போன்ற பல பிரச்சினைகளால் சிக்கி தவிக்கும் நாடுகளில் 3-வதாக போர்ச்சுகல் இடம்பெற்றுள்ளது.

இதனால் வேலை தேடி அல்கோடிம் கிராம இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். கிராமத்தில் கொஞ்சம் வசதி உள்ள தம்பதிகள் சிலர் மட்டுமே தங்கி உள்ளனர். ஆனால், குழந்தை பெற்று கொள்வதை அவர்கள் தவிர்த்து வருகின்றனர்.

எனவே, குழந்தை பிறப்பை அதிகரிக்க உள்ளூர் அதிகாரிகள் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ள னர். அதன்படி, குழந்தை பிறந்தால் பெற்றோருக்கு ரூ.3.50 லட்சம் (5000 யூரோ) வழங்கப்படும். இந்த பணத்தை குழந்தை வளர்ப்புக்குப் பயன்படுத்தி கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் அன்டானியோ (34), ஜெசிகா (22) தம்பதியினர்தான் குழந்தை பெற்று அரசு நிதியுதவியை முதலாவதாக பெற்றுள்ளனர்.

இந்தத் திட்டத்துக்கு ஓரளவு வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு அல்கோடிம் கிராமத்தில் 9 குழந்தைகள் பிறக்க உள்ளன. கடந்த ஆண்டு 6 குழந்தைகள்தான் பிறந்தது. ஆனால், கடந்த 1995ம் ஆண்டு கிராமத்தில் 23 குழந்தை கள் பிறந்தன. அதன்பின் குழந்தை பிறப்பு கணிசமாக குறைந்துவிட்டது.

இதுகுறித்து மேயர் ஒஸ் வால்டோ கோன்கால்வ்ஸ் கூறுகை யில், “இளைஞர்களை கிராமத் துக்கு கவர்ந்திழுப்பதுதான் எங்கள் இலக்கு. இளம் வயதினர் இல்லா மல் கிராமத்தில் குழந்தை பிறப் புக்கு வாய்ப்பில்லை’’ என்கிறார்.

எனினும் கடும் பொருளாதார நெருக்கடியால் பெரும்பாலான தம்பதிகள் குழந்தை பிறப்பை தள் ளிப்போட்டு விடுகின்றனர். குழந்தை பிறப்பு தொடர்ந்து குறைந்து வந்தால், வரும் 2060-ம் ஆண்டுக் குள் 20 சதவீத மக்கள் தொகையை போர்ச்சுகல் இழந்துவிடும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x