

பிரிட்டன் மக்கள்தொகையில் இந்தியர்கள், பாகிஸ்தானியர், வங்கதேசத்தவர் உள்ளிட்ட ஆசிய நாட்டவர், ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் பகுதி நாடுகளைச் சேர்ந்த கறுப்பு இனத்தவர் அதிகரித்து வருகின்றனர்.
இப்போது பிரிட்டன் மக்கள் தொகையில் 14 சதவீதமாக அதாவது 80 லட்சமாக உள்ள இவர்கள், 2050-ம் ஆண்டில் 30 சதவீதமாக அதிகரிப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இருந்ததைவிட ஆசியர்களும், கறுப்பு இனத்தவரும் இரு மடங்காக அதிகரித்துள்ளனர். அதேநேரத்தில் இந்தியர்கள் தவிர பிற ஆசிய ஆப்பிரிக்க நாட்டவரின், வேலையின்மை தேசிய சராசரியைவிட இரு மடங்கு அதிகரித்துள்ளது.
வெள்ளை இனத்தவருடன் ஒப்பிடும்போது ஆசிய, ஆப்பிரிக்க மாணவர்கள் பள்ளி யில் இருந்து இடைநின்று விடுவது அதிகம்.