

எகிப்தில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் 11 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2012-ம் ஆண்டு போர்ட் சென்டில் உள்ளூர் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது இரு அணி ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த கலவரத்தில் 70 பேர் உயிரிழந்தனர்.
பல நூறு பேர் படுகாயமடைந்தனர். கலவரத்தை ஏற்படுத்திய தொடர்பாக 73 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதில் 11 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
40 பேருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 21 பேர் விடுவிக்கப்பட்டனர்.
தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.