

இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த தமது சந்தைகள் இந்தியாவுக்கு தாராளமாக திறந்து விடப்படும் என பாகிஸ்தான் உறுதி வழங்கியுள்ளது. வர்த்தக அமைச்சர் குரம் தஸ்திகிர் கான் இதைத் தெரிவித்தார்.
இதற்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து என்ற பொருளா காது. பாகுபாட்டுக்கு இடம் இல்லாத வகையில் வர்த்தகம் செய்ய அனுமதி தரப்படும் என்பதுதான் இதற்கான பொருள் என்று கான் கூறியதாக ‘தி டான்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் பத்திரிகை யாளர்களிடம் பேசிய கான், மேலும் கூறியதாவது:
இந்தியாவுக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் சென்றது ஆக்கபூர்வ நடவடிக்கையாகும். காஷ்மீர், சியாச்சின், ஆப்கானிஸ்தான், சர் கிரீக் மற்றும் நதிநீர் பிரச்சி னைகளில் இந்தியாவுடன் பாகிஸ் தானுக்கு சில குறைகள் உள்ளன. ஆனால் தமக்குள்ள குறைகளை பட்டியலிட்டு கொடுப்பது மட்டுமே சிறந்த ராஜதந்திர நடவடிக் கையாகாது.
இந்தியா, ஈரான், ஆப்கா னிஸ்தான், வளைகுடா பிராந்தி யங்கள் நமது உற்பத்திப் பொருள் களை விரும்புகின்றன. எனவே இவற்றால் நமக்கு ஆதாயம் கிடைக்கும். முதலில் அமைப்பு ரீதியில் இணைய வேண்டும் என்றார் கான்.
இருதரப்புக்கும் இடையே வரலாற்று காலந்தொட்டு பிரச்சினை இருந்து வரும் நிலையில் இந்தியாவுக்கு வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து கொடுப்பது வேண்டாத ஒன்று என பாகிஸ்தானில் உள்ள பல்வேறு அமைப்புகள் ஆட்சேபித்து வருகின்றன. பாகிஸ்தானுக்கு 1996ல் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை வழங்கியது இந்தியா.