அட்லாண்டிக், பசிபிக் கடல்களை இணைக்கும் நிகராகுவா கால்வாய் திட்டத்துக்கு எதிர்ப்பு: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மக்கள் போராட்டம்

அட்லாண்டிக், பசிபிக் கடல்களை இணைக்கும் நிகராகுவா கால்வாய் திட்டத்துக்கு எதிர்ப்பு: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மக்கள் போராட்டம்
Updated on
2 min read

பசிபிக், அட்லாண்டிக் கடல்களை இணைக்கும் நிகராகுவா கால்வாய் திட்டத்தால் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப் புத் தெரிவித்துள்ளனர். இத்திட்டம் நிறைவேற்றப்படும் பகுதியிலி ருந்து 1.2 லட்சம் மக்கள் வெளியேற் றப்படுவர் என்பதால் எதிர்ப்பு வலுத் துள்ளது.

இத்திட்டத்தை எதிர்த்து நிகரா குவா நாட்டில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், விவசாயிகள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அமெரிக்க நாடான நிகராகுவாவின் குறுக்கே பசிபிக் கடலையும் அட்லாண்டிக் கடலையும் இணைக்கும் நிகரா குவா கால்வாய் கட்டுமானத்தின் முதல் கட்டப் பணிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கின.

5,000 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 3.2 லட்சம் கோடி) மதிப் பில் இந்தக் கால்வாய் கட்டமைக்கப் படுகிறது. பனாமா கால்வாயை விட நிகராகுவா கால்வாய் மூன்று மடங்கு பெரியதாக இருக்கும். இதன் நீளம் சுமார் 278 கி.மீ. இந்தக் கால்வாய் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றால், மிகப்பெரிதாகக் கட்டப்படும் அடுத்த தலைமுறைக் கப்பல்களும் இக்கால்வாய் வழியாக பயணிக்க முடியும்.

வாங் ஜிங் என்பவருக்குச் சொந்த மான சீனாவைச் சேர்ந்த ஹாங்காங் நிகராகுவா கால்வாய் மேம்பாட்டு நிறுவனம் (ஹெச்கேஎன்டி) இந்தக் கால்வாயைக் கட்டி வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இப்பணி நிறைவடையும் என எதிர்பார்க் கப்படுகிறது.

கடும் எதிர்ப்பு

இக்கால்வாய் வெட்டுவதற்கு 17,500 கோடி கன அடி மண்ணை தோண்ட வேண்டியிருக்கும். இக்கால்வாய் அமைவதால் ஏழை நாடான நிகராகுவாவின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் அதிகரிக்கும் என அந்நாட்டு அதிபர் கூறினாலும் அந்நாட்டு மக்களும் விவசாயிகளும் ஏற்பதாக இல்லை.

இத்திட்டத்தால் சுமார் 1.2 லட்சம் மக்கள் இடம் பெயர வேண்டியிருக்கும் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்ற னர். மேலும் ஏராளமான மரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் பாதிக் கப்படும். சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்படுவதன் பின்விளைவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இத்திட்டத்தை செயல்படுத்து வது சீன நிறுவனம் என்பதால், ‘சீனாவிடம் நாட்டை விற்காதீர் கள்’ என அதிபர் டேனியல் ஒர்டெ காவுக்கு எதிராக போராட்டக் காரர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

மத்திய அமெரிக்காவின் மிகப் பெரும் நன்னீர் ஏரியான கோசி போல்கா (நிகராகுவா ஏரி) வழியாக இக்கால்வாய் செல்வதால் அதன் இயல்புத் தன்மை பாதிக்கப்படும். இந்த ஏரியை ‘மத்திய அமெரிக்காவின் கலாபகசு’ என உலக வங்கி வர்ணிக்கிறது. அதன் பல்லுயிர்த்தன்மை காரணமாக இவ்வாறு கூறப்படுகிறது.

சுமார் 4 கி.மீ. தொலைவுக்கு இந்த ஏரியை, கால்வாய் ஊடறுத் துச் செல்லும். 29 மீட்டர் ஆழமும், 280 மீட்டர் அகலமும் கொண்டதாக ஏரியில் இக்கால்வாய் அமையும். நிகராகுவா ஏரி சராசரியாக 9 மீட்டருக்கு மேல் ஆழம் கொண்ட தல்ல. எனவே, 71.5 கோடி கன மீட்டர் அளவுக்கு ஏரியின் அடிப் பகுதி அகழ்ந்தெடுக்கப்படும். 100 ஆண்டு பழமை வாய்ந்த பனாமா கால்வாயில் இதுவரை 55 கோடி கன மீட்டர் அளவுக்கே அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயலால் ஏரியின் நீரோட்டம் பாதிக்கப்படும், பூச்சிக் கொல்லிகள், பாதரசங்களால் நீர் மாசுபடும். ஏரி தூர்ந்து விடும். கடல்பாசி உள்ளிட்ட கடல் தாவரங்கள் பாதிப்புக்கு உள்ளா வதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து விடும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அரசும் விடாப்பிடியாக இருக் கிறது, போராட்டக்காரர்களும் விடாப்பிடியாக இருக்கின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் நிறுவனத்தின் தலைவர் வாங் ஜிங், “இத்திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம். இத்திட்டத்தை சர்வதேச நகைச்சுவையாக மாற விடமாட்டோம்” என சூளுரைத்துள்ளார்.

உலக சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அமைப்புகளும் நிகராகுவாவில் நடைபெறும் போராட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in