Published : 05 Jun 2015 11:29 AM
Last Updated : 05 Jun 2015 11:29 AM

அண்டை நாட்டில் உருவாகும் தீவிரவாதத்தால் இந்திய பிராந்தியத்துக்கே அச்சுறுத்தல்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை

இந்தியாவின் அண்டை நாட்டிலிருந்து ஊக்குவிக்கப்படும் தீவிரவாதம் மற்றும் தீவிரவாதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி அப்பிராந்தியத்துக்கே பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பது மிகுந்த கவலைக்குரியது என இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

பெலாரஸ் நாட்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பெலாரஸ் அரசு பல்கலைக்கழ கத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:

இந்தியாவின் அண்டை நாட்டி லிருந்து உருவாகும் தீவிரவாதம் மற்றும் அதன் ஆதரவாளர் களால் இந்தியாவுக்கு மட்டுமின்றி பெலாரஸின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது கவலைக்குரியது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து நாடுகளும் சிறப்பாக இணைந்து செயல்பட வேண்டும். அதற்கான நோக்கத் திலும் தெளிவாக இருக்க வேண்டும். தனது வெளியுறவுக் கொள்கைகள் அமைதியான முறையில் இருப்பதில் இந்தியா எப்போதும் உறுதியாகவுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக ஸ்வீடன் உப்சாலா பல்கலைக்கழகத்தில் பேசிய போதும் தீவிரவாதம் குறித்து பிரணாப் முகர்ஜி கவலை தெரி வித்திருந்தார். மேற்கு ஆசியா மற்றும் உலகின் பிற பகுதிகளில் நடக்கும் தீவிரவாத சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்த அவர், தீவிரவாதம் எந்தவொரு மதத்துக்கும் மரியாதை தருவ தில்லை எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “சர்வதேச சமூகம் தீவிரவாதம் எனும் பேரழிவை எதிர்கொண்டுள் ளது. குறிப்பிட்ட நாடோ, குறிப் பிட்ட பகுதியோ மட்டுமின்றி ஒட்டு மொத்த மனிதகுலமும் தீவிரவா தத்தை எதிர்கொண்டுள்ளது. நல் லிணக்கம், சகிப்புத் தன்மை, கூட்டு மனப்பான்மை ஆகியவை பயங் கரவாதத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன” என்றார்.

ஏற்கெனவே பெலாரஸுடன் நிலையான உறவைப் பேணும் இந்தியா, தனது உறவை மேலும் வலுப்படுத்த விரும்புகிறது எனத் தெரிவித்தார்.

“அதிபர் அலெக்ஸாண்டர் லூகாஸென்கோவுடன் நடந்த விவாதம் மிகுந்த சிறப்பு மிக்கது. நமது கூட்டு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது, இரு நாடுகளும் கூட்டாளியாகச் செயல் படுவது குறித்துப் பேசினோம். நமது வர்த்தகத்தை வரும் 2020-ம் ஆண்டுக்குள் 100 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.6,000 கோடி) அளவுக்கு இரட் டிப்பாக்குவோம் என நம்பிக்கை உள்ளது. பெலாரஸுக்கு சந்தைப் பொருளாதார அந்தஸ்தை (எம்இஎஸ்) அளிக்கும் இந்தியா வின் முடிவு, இரு நாடுகளின் வர்த்தகத்தை அடுத்த கட்டத் துக்கு நகர்த்துவது மற்றும் சர்வதேச வர்த்தக கட்டமைப்பில் பெலாரஸையும் ஒருங்கிணைப் பதற்கான நடவடிக்கை.

சர்வதேச விவகாரங்களில் இரு நாடுகளுமே ஒரே விதமான கண் ணோட்டத்தைக கொண்டிருக் கின்றன. எதிர்காலத்திலும் இந்த உறவும் புரிதலும் தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x