Last Updated : 13 Jun, 2015 10:47 AM

 

Published : 13 Jun 2015 10:47 AM
Last Updated : 13 Jun 2015 10:47 AM

யாழ்ப்பாணத்தில் ராணுவ தலையீடு இல்லை: இலங்கை ராணுவ மூத்த தளபதி விளக்கம்

யாழ்ப்பாண நகர பாதுகாப்பில் ராணுவம் தலையிடவில்லை, போலீஸாரே பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று இலங்கை ராணுவ மூத்த தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த தெரி வித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டம், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அண்மையில் சமூகவிரோத கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத் தைக் கண்டித்து யாழ்ப்பாணத் தில் பல்வேறு போராட்டங் கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

இதைத் தொடர்ந்து யாழ்ப் பாணத்தில் கூடுதலாக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வடக்கு மாகாண முதல்வர் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் அண்மையில் கூறியபோது, யாழ்ப்பாண நகர பாதுகாப்பில் ராணுவம் தலையிடு கிறது என்று குற்றம் சாட்டினார்.

இதனை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. இதுகுறித்து பலாலி ராணுவ படைத் தலைமை அலு வலகத்தில் மூத்த தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நிருபர் களிடம் கூறியிருப்பதாவது:

பாதுகாப்பு நடவடிக்கை களுக்குத் தேவையான அளவு மட்டுமே யாழ்ப்பாணத்தில் ராணுவ வீரர்கல் நிலைநிறுத்தப்பட்டுள்ள னர். அந்த நகரம் ராணுவ கட்டுப் பாட்டில் இல்லை. உள்நாட்டுப் பாதுகாப்பை போலீஸாரே மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் பகுதியில் ராணு வத்தின் வசம் இருந்த சுமார் 19,159 ஏக்கர் நிலம் திருப்பி அளிக்கப்பட் டுள்ளது.

இப்பகுதியில் மொத்தம் 152 ராணுவ முகாம்கள் இருந்தன. அந்த எண்ணிக்கை தற்போது 93 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. ஆனால் அதன் பின்னரும் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை. இதனால் நாள்தோறும் இடையூறுகள் நேரிடு வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இப்போதைக்கு படைகள் வாபஸ் பெறமாட்டாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்திருப்பது நினைவுகூரத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x