சிங்கப்பூரில் ஆசிய-பசிபிக் மாநாடு வளாகத்தில் இளைஞர் சுட்டுக் கொலை

சிங்கப்பூரில் ஆசிய-பசிபிக் மாநாடு வளாகத்தில் இளைஞர் சுட்டுக் கொலை
Updated on
1 min read

சிங்கப்பூரில் ஆசிய-பசிபிக் பாதுகாப்பு மாநாடு நடைபெற்ற வளாகம் அருகே அத்துமீறி காரில் நுழைந்த இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு அமைச் சர்கள் பங்கேற்ற மாநாடு சிங்கப் பூரின் பிரபல நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஸ்டன் கார்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

அத்துமீறிய கார்

இதனிடையே மாநாடு நடைபெற்ற ஓட்டல் அருகேயுள்ள சோதனைச் சாவடியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட் டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் சோதனை சாவடியில் நிற்காமல் சென்றது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட போலீஸார் அந்த காரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் காரை ஓட்டிய இளைஞர் உயிரிழந் தார். மேலும் 2 பேர் கைது செய்யப் பட்டனர். காரை சோதனை செய்தபோது அதில் போதைப் பொருட்கள் இருந்தன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஆயுதங்களோ, வெடிகுண்டு களோ காரில் இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர் ந்து ஓட்டல் வளாகம் சீல் வைக்கப் பட்டது. மாநாடு அவசரமாக முடித்துக் கொள்ளப்பட்டது. அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஸ்டன் கார்டர் சிங்கப் பூரில் இருந்து வியட்நாமுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in