

சீனாவில் தென்மேற்குப் பகுதியில் உள்ள யுனான் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கத்தின் தாக்கம் 6.1 ஆக பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் 15 நகரங்களில் உள்ள சுமார் 1,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயர்ந்தனர். 45 பேர் படுகாயமடைந்தனர். மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சீனா, மியான்மர் எல்லை பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து எல்லையோர கிராம மக்கள் மியான்மரில் தற்காலிக குடியிருப்பு அமைத்து மக்கள் தங்கியுள்ளனர்.