

மிகவும் சோர்வான நிலையில் காணப்பட்ட தேனீக்கு சர்க்கரை தண்ணீர் அளித்து கேம்பிரிட்ஜ் மாகாண போலீஸார் காப்பாற்றியுள்ளனர்.
பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் மாகாணத்தில் வழக்கம்போல், வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருந்தபோது, ஹெல்மெட் அருகே தேனீ ஒன்று சோர்வாக இறக்கும் நிலையில் இருப்பதை கண்டனர். உடனடியாக, போலீஸார் இருவரும் சேர்ந்து சோர்ந்து கிடந்த தேனீக்கு கரண்டியில் சர்க்கரைத் தண்ணீர் அளித்து அதற்கு தெம்பூட்டினர்.
குடித்த தேனீ உற்சாகமடைந்தது பறக்க முயற்சி செய்தது.
ட்விட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்ட கேம்பிரிட்ஜ் போலீஸார், "பூச்சிகளை அரசு பாதுகாக்க தவறிவிட்டதாக இனி எந்த உயிரியல் ஆர்வலர்களும் சுட்டிக் காட்ட முடியாது. பறக்கும் நண்பர்களுக்கு இன்று நல்லது செய்த நிம்மதியுடன் இருக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தனர்.