Last Updated : 04 Jun, 2015 07:09 PM

 

Published : 04 Jun 2015 07:09 PM
Last Updated : 04 Jun 2015 07:09 PM

பாலியல் பலாத்கார குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியப் பாதிரியார்

14-வயது சிறுமியிடத்தில் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்ட வழக்கில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்ட இந்தியப் பாதிரியார் ஒருவர் தன் மீதான குற்றத்தை ஒப்ப்புக் கொண்டார்.

2005-ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த பாதிரியார் ரெவரண்ட் ஜோசப் பழனிவேல் ஜெயபால் (60) என்ற பாதிரியார் அமெரிக்காவில் உள்ள மின்னசோட்டாவில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவருக்கு அங்கு வலைவீசப்பட்டது.

ஆனால், குற்றம்சாட்டப்பட்டதையடுத்து 2005-ம் ஆண்டு செப்டம்பரில் இவர் தென்னிந்தியாவுக்கு வந்துவிட்டார். இவரை இந்திய போலீஸ் 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு தொடர்பாக அவர் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டார்.

4-ம் தர பாலியல் துன்புறுத்தல் பிரிவில் சார்த்தப்பட்ட குற்றத்தை இவர் ஒப்புக் கொண்டார்.

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு இப்போது வயது 25, இவர் தன்னை பாதிரியார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதை புகார் அளித்ததையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 15-ம் தேதி இவருக்கான தண்டனை அறிவிக்கப்படவுள்ள நிலையில் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x