Published : 17 Jun 2015 10:38 AM
Last Updated : 17 Jun 2015 10:38 AM

ஆப்கானிஸ்தானில் தலையிடக்கூடாது: ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் விவகாரங் களில் ஐ.எஸ். அமைப்பு தலை யிடக்கூடாது என்று தலிபான் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத் துள்ளனர்.

இராக், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பெரும்பகுதியை கைப்பற்றியுள்ளனர். இந் நிலையில் அந்த அமைப்பு தற்போது ஆப்கானிஸ்தானிலும் கால் பதித்துள்ளது.

கிழக்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் அண்மையில் ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதிகளுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றுள்ளது. இதில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்தத் தகவலை அமெரிக்க கூட்டுப் படை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறியபோது, ஆப்கானிஸ் தானில் ஐ.எஸ். கால் ஊன்றியிருப்பது உண்மைதான், ஆனால் இன்னும் முழுமையாக செயல்படவில்லை என்று தெரிவித்தன.

இந்நிலையில் ஆப்கானிஸ் தான் விவகாரங்களில் ஐ.எஸ். அமைப்பு தலையிடக்கூடாது என்று தலிபான் தீவிரவாதிகள் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தலிபான் துணைத் தலைவர் முல்லா அக்தர் முகமது மன்சூர் ஐ.எஸ். அமைப் பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதிக்கு கடிதம் அனுப்பி யுள்ளார். அதில் கூறியிருப்ப தாவது:

ஆப்கானிஸ்தானில் அமெரிக் கர்களுக்கு எதிராக ஜிகாத் போர் நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு ஒரு தலைமைதான் இருக்க வேண்டும்.

பல்வேறு தலைமைகள் இருந்தால் ஜிகாத் புனிதப் போர் வெற்றி பெறாது. நீங்கள் (ஐ.எஸ்.) வெகு தொலைவில் இருக்கிறீர்கள். அங்கிருந்து ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிடக் கூடாது.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x