

ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் அல்-காய்தாவின் அரேபிய தீபகற்ப பிரிவின் தலைவர் பலியானதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அல்-காய்தா அமைப்பின் மூத்த அதிகாரி வீடியோ பதிவு வழியாக கூறும்போது, "நசீர் அல் உஹாய்ஷி மற்றும் அவர்களது முஜாகுதீன் சகோதரர்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதில் அவர் பலியானார். அரேபிய தீபகற்ப நாடு துயரத்தில் ஆழ்ந்துள்ளது. அவரது ஆன்மா அமைதி பெற இஸ்லாமிய நாட்டினர் இறைவனிடம் வேண்டுகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
உஹாய்ஷியை அடுத்து இயக்கத்தின் அரேபிய தீபகற்ப தலைவராக முன்னாள் படை தளபதி காஸிம் அல்-ராய்மி நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தத் தகவலை உளவுத்துறை மூலம் அமெரிக்கா ஆய்வு செய்து வருவதாக அறிவித்துள்ளது.