

உலக யோகா சந்திப்பில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையின் சீன மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது.
ஷாங்காயில் உள்ள சீஜியாங் பல்கலைக் கழக பேராசிரியர்களான வாங் சூ செங், மற்றும் லிங் ஹாய் ஆகியோர் பகவத் கீதையை சீன மொழியில் ஆக்கம் செய்துள்ளனர்.
சீனாவில் யோகா திருவிழா நடைபெறுவதையடுத்து இந்தியாவின் முக்கிய யோகா ஆசிரியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பகவத் கீதையின் சீனமொழி பெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது.
சீனாவுக்கான இந்திய தூதர் அசோக் கே.கந்தா பகவத் கீதை சீன மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டார்.
சீன மொழிபெயர்ப்புக்கு முன்னுரை எழுதியவர் நாகராஜ் நாயுடு ஆவார்.
பண்டைய பவுத்த நூல்கள் இந்தியாவில் பிரசித்தி பெற்றது, ஆனால் முதல் முறையாக புனித நூலாக கருதப்படும் ஒரு இந்து சமய நூல் சீனாவில் வெளியிடப்படுகிறது என்று கூறப்படுகிறது.