Last Updated : 22 Jun, 2015 01:05 PM

 

Published : 22 Jun 2015 01:05 PM
Last Updated : 22 Jun 2015 01:05 PM

ஆப்கன் நாடாளுமன்றம் மீது தலிபான்கள் தாக்குதல்: துப்பாக்கிச் சூடு, கார் குண்டு வெடிப்பால் பதற்றம்

ஆப்கானிஸ்தான் நாடாளு மன்றத்தின் மீது தலிபான் தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். கார் வெடிகுண்டு மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் நாடாளுமன்ற கட்டிடத்தை தகர்க்க முயன்றனர். தாக்குதல் நடத்திய 7 தீவிரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர். இத்தாக்கு தலில் 19 பேர் காயமடைந்தனர். அதிபர், எம்.பி.க்கள் தப்பினர்.

ஆப்கானிஸ்தான் நாடாளு மன்றத்தில் நேற்று, புதிய பாதுகாப்பு அமைச்சராக மசூம் ஸ்டானிக்ஸாய் என்பவரை அதிபர் நியமனம் செய்தார். அதுதொடர் பான வாக்கெடுப்பு நடைபெற விருந்தபோது, நாடாளுமன்றத்தின் பிரதான வாயிலில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது.

தலிபான்கள் இத்தாக்கு தலை நடத்தினர். காரை ஓட்டிவந்த தீவிரவாதி கேட்டில் காரை மோதி தற்கொலைத் தாக்குதல் நடத்தி குண்டை வெடிக்கச் செய்தார். பிரதான நுழைவாயில் தகர்ந்ததும், அவ்வழியாக உள்ளே நுழைந்த 6 தீவிரவாதிகள் நாடாளுமன்ற அவைக்கு அருகே இருந்த கட்டிடத்தை நெருங்கினர். அங்கிருந்தபடி ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளால் சுட்டும், ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் குண்டுகளை வீசியும் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் நாடாளுமன்ற கட்டிடம் சிறிது சேதமடைந்தது.

உடனடியாக பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை நோக்கி பதிலுக்குச் சுட்டனர். சுமார் 2 மணி நேரம் இத்தாக்குதல் நடந்தது. அதே நேரம் நாடாளு மன்றத்துக்குள் இருந்த அதிபர் மற்றும் எம்.பி.க்களை பாதுகாப் பான இடத்துக்கு காவல் துறையினர் வெளியேற்றினர்.

“பாதுகாப்புப் படையினருக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 7 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப் பட்டனர்” என காவல்துறை செய்தித் தொடர்பாளர் எபாதுல்லா கரிமி தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நஜீப் டேனிஷ் கூறும்போது, “7 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு எம்.பி. மற்றும் 18 பொதுமக்கள் காயமடைந்தனர்” என்றார்.

தாக்குதல் குறித்து எம்.பி. முகம்மது ரேஸா கோஷாக் கூறும் போது, “பாதுகாப்பு அமைச்சர் நியமன அறிவிப்புக்காக காத்திருந் தோம். அப்போது பெரிய வெடிச் சத்தம் கேட்டது. தொடர்ந்து குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன. சில நொடிகளுக்குள் அவை முழுவதும் புகையால் சூழப்பட்டது. எம்.பி.க்கள் அனைவரும் கட்டிடத்தை விட்டு ஓடிவிட்டனர்” என்றார்.

தலிபான்களின் ட்வீட்

தலிபான் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாகித், “சில முஜாகிதீன்கள் நாடாளுமன்றத் துக்குள் நுழைந்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சர் அறிமுகம் செய்யப்பட்டபோது தாக்குதல் நடந்தது” என ட்விட்டரில் பதிவிட் டுள்ளார்.

உயர்பாதுகாப்புப் பகுதியை தீவிரவாதிகளால் கடக்க முடியவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் ஆப்கானிஸ் தானை விட்டு வெளியேறிய பிறகு, மிகப்பெரிய தாக்குதலை ஆப்கன் பாதுகாப்புப் படையினர் முதல்முறையாக தனியாகச் சந்தித்துள்ளனர்.

உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியி ருப்பது, ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

ஆப்கானிஸ்தானில், கடந்த ஏப்ரல் முதல் தலிபான்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் வெளி நாட்டினர் மீது தங்கள் தாக்கு தலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x