இந்தோனேசியாவில் ராணுவ விமானம் விழுந்து பயங்கர விபத்து: 30 பேர் பலி

இந்தோனேசியாவில் ராணுவ விமானம் விழுந்து பயங்கர விபத்து: 30 பேர் பலி
Updated on
1 min read

இந்தோனேசியாவின் மேடான் என்ற பகுதியில் ராணுவ விமானம் வீடு மற்றும் ஹோட்டல் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் சுமார் 30 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசிய ராணுவத்துக்கு சொந்தமான விமானம் சுமத்திரா தீவின் மேடானிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அருகே இருந்த குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. மெடான் நகர ஓட்டல் மற்றும் வீடுகள் மீது விமானம் விழுந்து வெடித்ததும் அந்தப் பகுதியே தீ பிடித்து எரியத் தொடங்கியது.

உடனடியாக தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் விமானி, 12 வீரர்கள் உள்ளிட்ட 30 பேர் பலியானதாக இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மீட்புப் பணிகள் நீடிப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in