

ஈரான் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அந்நாட்டு அரசு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக வல்லரசு நாடுகளுடன் நடைபெற்று வரும் பேச்சு வார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் ஒருசில விஷயங்களில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, தொடர்ந்து பேச்சு நடைபெறுகிறது” என்றார்.
அணு ஆயுதங்களை தயாரிப்பதாகக் கூறி ஈரானுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இந்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய 6 வல்லரசு நாடுகளும் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன.
இதுதொடர்பாக இடைக்கால ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி, அணு ஆயுத திட்டத்தை கை விட்டால், ஈரான் மீதான பொரு ளாதார தடை படிப்படியாக விலக் கிக்கொள்ள முடிவு செய்யப்பட் டுள்ளது. ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக தொடர்ந்து பேச்சு நடைபெற்று வருகிறது.