அமெரிக்காவில் பால்கனி இடிந்து விழுந்து 6 பேர் பலி

அமெரிக்காவில் பால்கனி இடிந்து விழுந்து 6 பேர் பலி
Updated on
1 min read

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் இறந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

பெர்க்லி நகரில், கலிபோர் னியா பல்கலைக்கழக வளாகத் தில் ஸ்டக்கோ அபார்ட்மென்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு அயர்லாந்தில் இருந்து கோடை விடுமுறையில் வேலை பார்ப்பதற்காக ஜே-1 விசாவின் கீழ் வந்த மாணவர்கள் தங்கியிருந்தனர்.

இம்மாணவர்கள் நேற்று முன் தினம் இக்குடியிருப்பின் 5-வது தளத்தின் பால்கனியில் பிறந்த நாள் விழா கொண்டாடினர். இந் நிலையில் பால்கனி திடீரென இடித்து சுமார் 50 அடிக்கு கீழே நடைபாதையில் விழுந்து. இதில் அயர்லாந்து கல்லூரி மாணவர்கள் 5 பேர், உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து போலீஸார் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிக பளு காரணமாக பால்கனி இடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத் துக்கு 1 மணி நேரத்துக்கு முன்பு மாணவர்கள் கூச்சலிட்டு தொந் தரவு செய்வதாக போலீஸாருக்கு புகார் வந்துள்ளது. ஆனால் போலீஸார் வருவதற்குள் விபத்து நிகழ்ந்துள்ளது. இது ஒரு தேசிய துயரம் என்று அயர்லாந்து பிரதமர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in