

இந்தியாவில் அகதிகளாக இருந்துவிட்டு, கடல் வழியாக இலங்கைக்குள் நுழைய முயற்சித்த ஒரே குடும்பத்தைச்சேர்ந்த ஐந்து பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது.
2004-ம் ஆண்டு மன்னார் பகுதியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த அந்தக் குடும்பம் அங்கு சில ஆண்டுகள் அகதியாக இருந்தது. அவர்கள் கடல் வழியாக இலங்கைக்குள் வியாழக்கிழமை நுழைய முயன்றனர். அவர்களை, தலைமன்னார் பகுதியில் இலங்கைக் கடற்படை இடைமறித்து கைது செய்தது. இலங்கைக்கு அவர்கள் திரும்பியது குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.