குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க சத்யார்த்தி அழைப்பு

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க சத்யார்த்தி அழைப்பு
Updated on
1 min read

குழந்தைத்தொழிலாளர் முறையை ஒழிக்க உலக நாடுகளுக்கு, நோபல் பரிசு பெற்ற சத்யார்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆபிரஹாம் லிங்கன் நினை விடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சத்யார்த்தி, “21-ம் நூற் றாண்டிலும் குழந்தைத்தொழிலா ளர் என்ற வடிவத்தில் அடிமை முறை நீடித்திருப்பது மிகுந்த அவமானம்.

பல்வேறு வடிவங்களில் குழந்தை அடிமை முறை இன்னும் உள்ளது. இது ஒரு நாட்டின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. உலகளாவிய பிரச்சினை.

ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். அனைத்து வளர்ச்சி களும் குழந்தைகளிலிருந்தே தொடங்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in