

சீன சொகுசு கப்பல் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. 300-க்கும் மேற்பட்டோரை இன்னமும் காணவில்லை.
கடந்த 1-ம் தேதி அதிகாலை யாங்ஸி நதியில் சுமார் 450 பேருடன் சென்று கொண்டிருந்த ‘ஈஸ்டன் ஸ்டார்’ என்ற சொகுசு கப்பல் தண்ணீரில் மூழ்கியது. கப்பலில் இருந்து இதுவரை 14 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற தேடுதல் பணியில் 97 பேரின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. 300-க்கும் மேற் பட்டோரை இன்னமும் காண வில்லை. அவர்களை தேடும் பணியில் 200 நீர்மூழ்கி வீரர்கள் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக நதியில் மூழ்கி கிடக்கும் ஈஸ்டன் ஸ்டார் கப்பலை நேராக தூக்கி நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 2200 டன் எடை கொண்ட அந்த கப்பலை தூக்க 500 டன் எடை கொண்ட இரண்டு மிதக்கும் கிரேன் கள் கொண்டு வரப்பட்டன. அந்த கிரேன்கள் மூலம் சொகுசு கப்பல் நேற்று சமநிலையாக நிறுத்தப்பட்டது. தற்போது கப்ப லின் உள்ளே உடல்களை தேடும் பணி தொடங்கியுள்ளது.
விபத்துக்கான காரணம் என்ன?
கடலில் இயக்கப்படும் கப்பல் கள் பலத்த காற்றை எதிர் கொள்ளும் வகையில் வடிவமைக் கப்படுகின்றன. ஆனால் ஈஸ்டன் ஸ்டார் கப்பல் யாங்ஸி நதியில் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது. இதனால் பலத்த காற்றை எதிர்கொள்ளும் வகையில் கப்பல் வடிவமைக்கப்படவில்லை.
சம்பவத்தன்று சுமார் 130 கி.மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியுள்ளது. அதன் காரணமாகவே கப்பல் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளது என்று முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலின் கேப்டனும் தலைமை பொறியாளரும் உயிர் தப்பியுள்ளனர். போலீஸ் காவலில் உள்ள அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.