சிறையில் உள்ள தீவிரவாதிகளை விடுவிக்க நைஜீரிய அதிபர் மறுப்பு: கடத்தப்பட்ட மாணவிகளை மீட்பதில் சிக்கல்

சிறையில் உள்ள தீவிரவாதிகளை விடுவிக்க நைஜீரிய அதிபர் மறுப்பு: கடத்தப்பட்ட மாணவிகளை மீட்பதில் சிக்கல்
Updated on
1 min read

கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை விடுவிக்க வேண்டும் என்றால், சிறையில் உள்ள போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த தீவிர வாதி களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நைஜீரிய அதிபர் குட்லக் ஜோனாதன் நிராகரித்து விட்டார்.

இத்தகவலை ஆப்பிரிக்க விவகாரங்களுக்கான பிரிட்டிஷ் அமைச்சர் மார்க் சைமண்ட்ஸ் தெரிவித்தார்.

போர்னோ மாகாணத்தில் உள்ள சிபோக் நகரிலிருந்து 200 பள்ளி மாணவிகளை கடத்திச் சென்ற போகோ ஹராம் தீவிரவாத அமைப்பினர், அவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் சிறையில் உள்ள தங்கள் இயக்கத் தினரை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி போகோ ஹராம் தலைவர் அபுபக்கர் ஷெகாவ் பேசிய வீடியோ சி.டி. கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த நைஜீரிய உள்துறை அமைச்சர் அபா மோரோ, “தீவிரவாத அமைப்பின் கட்ட ளைக்கு அடிபணிய முடியாது” என்று கூறினார்.

இந்நிலையில் பள்ளிக் குழந்தைகளை மீட்பது தொடர்பாக ஆலோசனை நடத்த நைஜீரிய அதிபர் குட்லக் ஜோனாதனை ஆப்பிரிக்க விவகாரத்துக்கான பிரட்டிஷ் அமைச்சர் மார்க் சைமண்ட்ஸ் சந்தித்துப் பேசினார்.

பின்னர், மார்க் சைமண்ட்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தீவிரவாதிகளை விடுவிக்க அதிபர் மறுத்துவிட்டார்.

எனினும், அந்த அமைப்பி னருடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்படும் பேச்சு வார்த்தையை தொடர்ந்து மேற்கொள்ள அதிபர் விருப்பம் தெரிவித்துள்ளார்” என்றார்.

மாணவிகளை போகோ ஹராம் தீவிரவாதிகள்மறைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டறிய தேடுதல் பணியில் உளவு விமானத்தை ஈடுபடுத்த அமெரிக்க ராணுவத் தலைமை யகம் பென்டகன் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in