

சீனாவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர இளைஞர் தனது செல்லப் பிரா ணியான நாயின் கால்களில் ஆப்பிள் கைக்கடிகாரங்களைக் கட்டி புகைப்படம் எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட் டுள்ளார். அத்துடன் இந்த கடிகாரங் களை உங்களால் வாங்க முடியுமா என கிண்டலடித்துள்ளதால் அந்த இளைஞருக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் வாங் ஜியான்லின். இவரது மகன் வாங் சிகாங் (27) தனது செல்லப் பிராணிக்காக (நாய்) சீன வெய்போவில் (சமூக இணைய தளம்) ஒரு கணக்கு தொடங்கி உள்ளார். இதை 8 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இதில் ரூ.12.6 லட்சம் மதிப்பிலான 2 ஆப்பிள் கைக்கடிகாரங்கள் நாயின் காலில் கட்டப்பட்ட ஒரு புகைப்படம் சமீபத்தில் வெளியானது.
அதில், “எனக்கு மீண்டும் புதிய கைக்கடிகாரங்கள் கிடைத்துள்ளன. உங்களால் வாங்க முடியுமா?” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இதைப் பார்த்து கடும் கோபத்துக்கு உள்ளான சீனவாசிகள், தங்களது கண்டன கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். சீனாவில் பொரு ளாதார சமநிலையற்ற நிலை காணப்படுவதை உணர்த்துவதாக இது உள்ளதாகக் கூறியுள்ளனர். கோடீஸ்வர இளைஞரான வாங் சிகாங்கை சீன வெய்போவில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 1.15 கோடியைத் தாண்டி உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இளம்பெண்கள். இவரை நாட்டின் கணவர் என்ற புணைப்பெயரில் அழைக்கின்றனர். இவர் அவ்வப் போது இணையதளத்தில் பிறரை குறிப்பாக பேஷன் துறையினரை கேலி செய்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
சீன அரசின் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தனது தலையங்கத்தில், இந்த கோடீஸ்வர இளைஞரின் செயலைக் கண்டித்துள்ளது. அதில், “சிகாங்கின் இத்தகைய செயல் சீன மக்களின் நேர்மைக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இது போன்ற செயலை ஊக்குவித்தால் சமூகம் சீரழிந்துவிடும். இந்தச் செயலை பொதுமக்கள் பாராட்டவோ, பின்பற்றவோ கூடாது” என கூறப்பட்டுள்ளது.
மேலும் ஜின்ஹுவா பகுப்பாய் வாளர் ஒருவர் எழுதியுள்ள கட்டுரையில், “வாங் ஜியான்லின் நல்ல மனிதர். அவர் தனது மகனின் செயலை ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து வாங் ஜியான்லின் கூறும்போது, “என் மகன் படிப்பதற்கா வெளிநாடு சென்றிருந் தான். அதனால் அவனிடம் மேற்கத்திய நாடுகளின் தாக்கம் காணப்படுகிறது” என்றார்.