Published : 30 May 2015 10:37 AM
Last Updated : 30 May 2015 10:37 AM

உணவு விடுதி ஊழியர்களுக்கு ரூ. 1.27 லட்சம் ‘டிப்ஸ்’ கொடுத்து அசத்திய வாடிக்கையாளர்

அமெரிக்காவில் உணவு விடுதி யில் நண்பருடன் உணவு அருந்திய ஒருவர் தனக்குப் பிடித்தமான உணவைப் பரிமாறிய அந்த உணவு விடுதி ஊழியர்களுக்கு 2,000 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.1.27 லட்சம்) ‘டிப்ஸ்’ கொடுத்து ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.

வாஷிங்டன் கனெக்டிகட் பகுதியில் ‘புளூ 44’ என்ற மதுபான விடுதியுடன் இணைந்த உணவு விடுதி உள்ளது. இங்கு அடிக்கடி வரும் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் கடந்த திங்கள்கிழமை இரவு தனது நண்ப ருடன் உணவு அருந்தி யுள்ளார். அவர் தனக்கு பிடித்தமான லூசியானா பகுதியின் பிரபலமான இறைச்சி உணவான கம்போ மற்றும் பீர் அருந்தியுள்ளார்.

அதற்கு, 93 அமெரிக்க டாலர் கள் (சுமார் ரூ.5,900) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவரோ சுமார் ரூ.1.27 லட்சம் ரூபாயை ‘டிப்ஸ்’ ஆக வைத்து விட்டு, அந்த ரசீதில் “உங்களின் கம்போ உணவுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது உணவு விடுதி ஊழியர்கள் அனைவரையும் இன்ப அதிர்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வாடிக்கையாளரின் பெயர் தெரியவில்லை இது தொடர் பாக அந்த உணவு விடுதியில் பணியாற்றும் நார் டெல்லி கூறும் போது, “அது எனக்கு மிகவும் இன்ப அதிர்ச்சி என்பதைத் தவிர வேறெதுவும் கூற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x