

செயற்கைக் கோள் தரவுகளின் படி நேபாளத்தின் பயங்கர பூகம்பத்தின் தாக்கத்தினால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 2.5 செ.மீ. குறைந்திருக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நேபாள பூகம்ப விளைவை செயற்கைக் கோள் உதவியுடன் கண்ட போது, பரவலான நிலப்பகுதி பூகம்பத்துக்குப் பிறகு மேல்நோக்கி தூக்கி போடப்பட்டுள்ளது தெரிந்தது. சுமார் 1மீ வரை செங்குத்தாக பரவலான நிலப்பகுதி தூக்கிப் போடப்பட்டுள்ளது. இதனால்தான் இத்தகைய கடும் சேதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்களை மேற்கோள்காட்டி ‘லைவ் சயன்ஸ்’ தெரிவித்துள்ளது.
இதனையடுத்து உலகின் உயரமான எவரெஸ்ட்டின் உயரம் சற்றே குறைந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவல் ஐரோப்பாவின் ‘செண்டினெல்-1ஏ என்ற செயற்கைக் கோள் தரவுகளின் படி பெறப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் இந்த செயற்கைக் கோள் தரவுகளை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். மேலும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிகிறது
நேபாள் பூகம்பத்தில் மொத்தமாக 2,79,234 வீடுகள் தரைமட்டமாயின. 2,37,068 வீடுகள் பாதி சேதமடைந்துள்ளன.