Last Updated : 02 May, 2015 11:20 AM

 

Published : 02 May 2015 11:20 AM
Last Updated : 02 May 2015 11:20 AM

’அமெரிக்காவில் ஆரோக்கியத்துக்காக யோகா பயிற்சி செய்பவர்களே அதிகம்’

ஆன்மிக முக்கியத்துவம் குறைந்ததாக ஆய்வில் தகவல்

அமெரிக்காவில் தற்சமயம் பெருகி வரும் யோகா சந்தை, ஆன்மி கத்தை விட ஆரோக்கியத்துக்கே அதிக முக்கியத்துவம் தருகிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள சாப்மேன் பல்கலைக்கழகம் 1980 முதல் தற்போது வரையிலான அமெரிக்க யோகா சந்தை குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

அதன்படி, அமெரிக்காவின் யோகா சந்தை என்பது ஆன்மி கத்தில் இருந்து விலகி ஆரோக்கி யத்துக்கு ஏற்ற விஷயமாக யோகாவை பயன்படுத்தி வருகிறது என்பது தெரியவந்துள்ளது. இதற் குக் காரணங்களாக‌, யோகா ஆசிரியர்கள் பயிற்று விக்கப்படும்முறை, யோகா கற்றுத் தரும் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி, தங்களை `பிராண்ட்' செய்து கொள்ளும் திறன் ஆகியவை சுட்டிக் காட்டப்படுகின்றன.

அமெரிக்காவில் 2001ம் ஆண்டு யோகா பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை 43 லட்சமாக இருந் தது. அது இன்று 2 கோடியாக உள்ளது. யோகா வகுப்பு, யோகா கருவிகள் உள்ளிட்ட விஷயங்களுக்காக ஓர் ஆண்டுக்கு அவர்கள் 10.3 பில்லியன் டாலர்களை (சுமார் ரூ.6 லட்சம் கோடி) செலவழிப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அங்கு 2004ம் ஆண்டில் 14,058 ஆக இருந்த யோகா பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை 2013ம் ஆண்டில் 26,506 ஆக அதிகரித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x