

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் 5 இந்தியர்களின் பட்டியலை அந்நாடு தனது அரசிதழில் வெளியிட்டுள்ளது.
இதில் தொழிலதிபர் யாஷ் பிர்லா, குர்ஜித் சிங் கோச்சார், டெல்லியைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ரித்திகா ஷர்மா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இது தவிர ஸ்நேஹ்லதா சஹானி, சங்கீதா சஹானி ஆகியோரின் பெயரும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
வெளிநாடுகளில் பதுக்கி வைக் கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டுக்கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்தப் பட்டியலை சுவிட்சர் லாந்து அரசு வெளியிட்டுள்ளது.
தங்களைப் பற்றிய தகவல் களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று இவர்கள் விரும்பினால் 30 நாட்களுக்குள் சுவிஸ் நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்யலாம்.
பட்டியலில் இடம்பெற்றுள்ள பிர்லா மற்றும் இதர நபர்களிடமி ருந்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. ஏற்கெனவே ஹெச்.எஸ்.பி.சி. வெளியிட்ட கருப்பு பணப் பட்டியலிலும் யாஷ் பிர்லாவின் பெயர் இருந்தது. அப்போதும் இதுகுறித்து அவர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்த மாதத்தில் மட்டும் சுவிட்சர் லாந்து அரசிதழில் 40 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ள தாகவும் வரும் நாட்களில் மேலும் சிலரது பெயர்கள் வெளியிடப்பட லாம் என்றும் அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.